செய்தி பொழுதுபோக்கு

இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி

தமிழில் ஒரு விடுகதை ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலம் 1979-ஆம் ஆண்டு இசைமையப்பாளராக திரைத் துறையில் அறிமுகம் ஆனார் கங்கை அமரன்.

பின்னர் கோழிக் கூவுது படத்தின் மூலம் 1982-ல் இயக்குநராக அறிமுகமானார். பல படங்களுக்கு பாடல்களை எழுதிய அவர், பாடல்களையும் பாடியுள்ளார்.

தற்போது 77 வயதாகும் கங்கை அமரன், புதிய படத்தில் நடித்து வருகிறார். சிவகங்கை சிற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர், மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!