அமெரிக்காவில் 2 பெண்கள் கொலை – குற்றவாளிக்கு 130 ஆண்டுச் சிறைத்தண்டனை
 
																																		அமெரிக்காவில் கொலை குற்றச்சாட்டில் சிக்கிய 130 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இண்டியானா (Indiana) மாநிலத்தைச் சேர்ந்த 2 பதின்ம வயதுப் பெண்களைக் கொலை செய்த குற்றச்சாட்டிலேயே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2017ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. டெல்பி (Delphi) என்ற பகுதியருகே உள்ள ரயில் தண்டவாளப் பாலத்தில் கழுத்தில் காயங்களுடன் இருவரின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டன.
அவர்களில் ஒருவர் சம்பவத்தின்போது கைத்தொலைபேசியில் எடுத்த காணொளி, ஒலிப்பதிவு, புகைப்படம் ஆகியவற்றில் அந்த நபரின் முகமும் குரலும் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இறந்த பெண்களில் ஒருவரின் தாத்தா, 8 ஆண்டுகளுக்குப் பின் அவர்களது மரணத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது என்று கூறினார்.
அதற்கு உதவிய வழக்கறிஞர்களுக்கும் பொலிஸாருக்கு ஆதரவளித்த சமூகத்தினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
 
        



 
                         
                            
