ஜெர்மனியின் மியூனிக் விமான நிலைய சேவைகள் வழமைக்கு திரும்பின!
ஜெர்மனியின் மியூனிக் விமான நிலையத்தின் சேவைகள் இன்று (04.10) வழமைக்கு திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதற்கு முன்னதாக விமான நிலையப் பரப்பில் ட்ரோன்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டிருந்தன.
சுமார் 17 விமானங்கள் தரையிறக்கப்பட்டதாகவும், 15 விமானங்களை அருகிலுள்ள நகரங்களுக்கு திருப்பிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நடவடிக்கையால் 3000 பயணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு, மியூனிச்சில் தரையிறங்க வேண்டிய விமானங்களை ஸ்டட்கார்ட், நியூரம்பெர்க், வியன்னா மற்றும் பிராங்பேர்ட்டுக்கு திருப்பி விட்டதாக தெரிவித்தது.
ட்ரோன்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் இவ்வாறான மர்ம ட்ரோன்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், தாமதங்களையும் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





