செய்தி

வரலாற்று சாதனையை தவறவிட்ட முல்டர் – கோபமடைந்த கிறிஸ் கெயில்!

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாராவின் 400 ரன்கள் என்ற உலக டெஸ்ட் சாதனையை முறியடிக்க 34 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 626/5 என்ற ஸ்கோரில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார்.

இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஏனெனில் முல்டருக்கு லாராவின் வரலாற்று சாதனையை முறியடிக்கும் தனிப்பட்ட வாய்ப்பு இருந்தது.

ஆனால், அவர் அந்த சாதனையை படைக்கவில்லைபிரையன் லாரா ஒரு சகாப்தம் – இதை நாம் மறுக்கவே முடியாது. இங்கிலாந்துக்கு எதிராக அவர் குவித்த 400 ரன்கள் என்பது கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு சாதனை. அத்தகைய மகத்தான வீரரின் வசம் அந்த சாதனை இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது அதனால் தான் நான் இந்த சாதனையை முறியடிக்க விரும்பவில்லை என வியான் முல்டர் விளக்கமும் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோ முல்டரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் அடிக்க தவறியது குறித்து கடுமையாக விமர்சித்தார்.

கடந்த ஜூலை 9-ஆம் தேதி அன்று, மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த ஒரு ஊடக நிகழ்ச்சியில் பேசிய கெயில் முல்டர் 400 ரன்கள் என்ற வரலாற்று மைல்கல்லை எட்டத் தவறியதை “வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பை” தவறவிட்டதாக விமர்சித்தார்.

“எனக்கு 400 ரன்கள் அடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், கண்டிப்பாக அதை செய்திருப்பேன். ஏனெனில் இது அடிக்கடி நிகழக்கூடியது அல்ல. டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் குவிக்கும் வாய்ப்பு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும். அந்த அரிய வாய்ப்பை நீங்கள் தவறவிட்டீர்கள்,” என்று கூறி, முல்டரை நேரடியாக விமர்சித்தார்.

மேலும் கூறுகையில், “323 ரன்கள் அடித்தது நிச்சயமாக சிறந்த இன்னிங்ஸ் தான், ஆனால் 400 ரன்கள் என்றால், அது வரலாற்றில் என்றும் நின்று பேசப்படும். முல்டர் அந்த இன்னிங்ஸை முடித்திருக்க வேண்டும். அவர் மனதளவில் தயாராக இருந்திருக்க வேண்டும், அந்த அழுத்தத்தை எதிர்கொண்டு 400 ரன்களை எட்டியிருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

“நான் 2000-ல் ஆன்டிகுவாவில் 333 ரன்கள் அடித்தேன். அது எனக்கு மறக்க முடியாத ஒரு தருணம். ஆனால், 400 ரன்கள் என்பது வேறு மட்டத்தில் இருக்கும். பிரையன் லாரா (2004-ல் 400* ரன்கள்) மட்டுமே இதைச் செய்துள்ளார். முல்டருக்கு அந்த வாய்ப்பு இருந்தது, ஆனால் அவர் அதை இழந்துவிட்டார்,” என்று கெயில் கூறினார். கெயில், முல்டருக்கு அறிவுரை வழங்கும் வகையில், “டெஸ்ட் கிரிக்கெட் என்பது மன உறுதியை சோதிக்கும் ஒரு விளையாட்டு. 300 ரன்களைத் தாண்டிய பிறகு, ஒவ்வொரு ரன்னும் உங்களை வரலாற்றுக்கு அருகில் கொண்டு செல்கிறது. முல்டர் அந்த மைல்கல்லை மனதில் வைத்து ஆடியிருக்க வேண்டும்” எனவும் கெயில் தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content