எவரெஸ்ட் சிகரத்தை விட 4 மடங்கு உயரமான மலைகள் – கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

எவரெஸ்ட் சிகரத்தை விட 3 முதல் 4 மடங்கு உயரமான சிகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மலைகள் பூமியின் உள்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அண்டார்க்டிகாவில் உள்ள நில அதிர்வு மையங்களைப் பயன்படுத்தி, வல்லுநர்கள் இந்த வியக்கத்தக்க பெரிய மலைகளை, சுமார் 1,800 மைல் ஆழத்தில் கண்டுபிடித்து உள்ளனர்.
அதி மற்றும் குறைந்த வேக மண்டலங்கள் எனப் பெயரிடப்பட்ட இந்த பிரம்மாண்டமான நிலத்தடி மலைத் தொடர்கள், நில நடுக்கங்கள் மற்றும் அணு வெடிப்புகள் மூலம் போதுமான நில அதிர்வுத் தரவுகளை உருவாக்காததால், இத்தனை ஆண்டுகளாக பார்வையில் இருந்து தப்பிக்க முடிந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)