இலங்கை – வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்!
இலங்கை – காலி மாத்தறை பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று காலி நகரில் இன்று (29) மாலை தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளதுடன், மின்விளக்குக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது.
காலி மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்தனர்.
எனினும் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமானது.
(Visited 3 times, 1 visits today)