திருகோண மலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து ;பூசகர் பலி!

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி பூநகர், 20 ஏக்கர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஈச்சிலம்பற்றில் இருந்து சேறுநுவர நோக்கி சென்று கொண்டிருந்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட பூநகர் சிவன்கோயிலில் பூசகராக பணி புரிபவர் எனவும் ஈச்சிலம்பற்று -பூநகர் பகுதியில் வசித்து வரும் கே.கஜரூபன் (34) எனவும் தெரியவருகிறது.
உயிரிழந்த பூசகரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 11 times, 1 visits today)