இலங்கை சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை : எதிர்கட்சிகள் தீவிர ஆலோசனை!
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி பெறச்செய்வது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
இதன்படி நாளை (19.03) சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது பாராளுமன்றத்தில் சலசலப்பு ஏற்படலாம் என அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ளதுடன் மறுநாள் மாலை 4.30 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இந்த பிரேரணையை தோற்கடிக்க பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக தற்போது எதிர்க்கட்சி மற்றும் ஆளும் தரப்பு இரகசிய பேச்சுக்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சர்களின் இல்லங்களில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
(Visited 9 times, 1 visits today)