பணத்திற்காக மகளை விற்ற தாய்கு விளக்கமறியல்
பணத்திற்காக தனது 14 வயது மகளை விற்ற சிறுமியின் தாய் மற்றும் சந்தேகநபர்கள் இருவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை பதில் நீதவான் அதுல குணசேகர இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார். சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரின் தாயார் திவுலபிட்டிய, வெலகன பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய பெண் ஆவார்.
மற்றைய இரு சந்தேகநபர்கள் திவுலபிட்டிய உல்லலபொல பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடையவர் மற்றும் மினுவாங்கொடை நில்பனாகொட பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடையவர்.
சந்தேகநபர் 52 வயதுடையவர் எனவும், இரண்டாம் சந்தேக நபர் 42 வயதான டயர் கடை ஒன்றின் உரிமையாளர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய் மற்றும் சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு வைத்தியசாலையின் சமூக நோய்கள் தொடர்பான நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தி சமூக நோய்கள் தொடர்பான அறிக்கையை பெற்று எதிர்வரும் 22ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியை நன்னடத்தை அறிக்கை கிடைக்கும் வரை நீர்கொழும்பில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்குமாறு திவுலபிட்டிய பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
சிறுமியின் தந்தை இறந்துவிட்ட நிலையில், நான்கு பிள்ளைகளின் தாயான சந்தேகநபர், தனது வீட்டிற்கு ஆட்களை வரவழைத்து, ஒருவரிடமிருந்து தலா 2000 ரூபா பணத்தை பெற்று தனது மகளை வீட்டில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அனுப்பியுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு ஆட்களை வரவழைத்து, அந்த நபரையும் மகளையும் வீட்டுக்குள் வைத்துவிட்டு, கதவுகளை அடைத்து பாதுகாத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு பதில் நீதவான் அதுல குணசேகர பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.