இங்கிலாந்தில் வீடொன்றில் தீ விபத்து – தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலி
பாக்ஸிங் டே அன்று இங்கிலாந்தின் க்ளோசெஸ்டர்ஷயரின் (Gloucestershire) ஸ்ட்ரூட் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்
தந்தை வீட்டில் இருந்தபோதும் குளியலறை ஜன்னல் வழியாக வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 40 வயது தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஏழு வயது சிறுமி மற்றும் நான்கு வயது சிறுவனே தீ விபத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.
தாயின் சடலம் மாத்திரம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குழந்தைகளின் சடலங்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





