சீனாவில் நுளம்பு அளவிலான மைக்ரோ ட்ரோன் தயாரிப்பு
சீனாவில் நுளம்பு அளவு மட்டுமே இருக்கக்கூடிய ட்ரோன் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டது.
இதன் மூலம் கண்காணிப்பு, சைபர் குற்றம் மற்றும் உயிரியல் போர் ஆகியவற்றில் கூட சாத்தியமான பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மஞ்சள், இலை வடிவ இறக்கைகள், ஒரு நேர்த்தியான கருப்பு உடல் மற்றும் மூன்று மெல்லிய கால்களை இந்த மைக்ரோ ட்ரோன்,கொண்டுள்ளது.
தனிநபர்களைக் கண்காணிக்க அல்லது உரையாடல்களைக் கேட்கப் பயன்படுத்தப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கொசு ட்ரோனை சாதாரணமாக ஸ்மார்ட் போன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.





