இந்தியாவில் முடக்கப்பட்ட 80 லட்சத்திற்கும் அதிகமான WhatsApp கணக்குகள்!

இந்தியாவின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களின் ஒன்றான வாட்ஸ்அப், 8.4 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, ஒரு மாதத்தில் அந்த கணக்குகளை தடை செய்துள்ளது. மோசடி நடவடிக்கைகளுக்கு வாட்சப் தளத்தை தவறாகப் பயன்படுத்துவது அதிகரித்து வரும் செயலால் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக மெட்டாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 4(1)(d) மற்றும் பிரிவு 3A(7) இன் விதிகளுக்கு கீழ், இந்தியாவில் சுமார் 8.45 மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகளை மெட்டா தடை செய்ததாக அறிக்கையில் கூறியுள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் 31 வரை 1.66 million கணக்குகள் விதிகளை மீறியதால் தடை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 16 லட்சத்துக்கும் மேற்பட்ட அக்கவுண்ட்டுகளை யாரும் புகார் கொடுக்காமலேயே மெட்டா தனது கண்காணிப்பின் அடிப்படையில் அகற்றியுள்ளனது.
கணக்குகள் பெருமளவில் தடை செய்யப்படுவதற்கான பல முக்கிய காரணங்களை WhatsApp குறிப்பிட்டுள்ளது.
மொத்தமாக நிறைய செய்திகளை அனுப்புதல், ஸ்பேமிங் செய்தல், மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் தவறாக வழிநடத்தும் அல்லது தீங்கு விளைவிக்கும் தகவல்களைப் பகிர்தல் போன்ற செயல்பாடுகள் இதில் அடங்கும். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கண்காணிக்கப்பட்ட கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் தளத்தை பயன்படுத்தி துன்புறுத்தல், தளத்தை துஷ்பிரயோகம் செய்தல், தவறான செயல்களில் ஈடுபடுவது போன்ற பயனர் புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
பயனர் பாதுகாப்பிற்காக வாட்ஸ்அப் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக வாட்சப் தளம் ஒரு முக்கிய தகவல் தொடர்பு கருவியாக மாறியுள்ள நிலையில், அதன் பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான சூழலை கொடுப்பதை மெட்டா நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறுகிறது. மெட்டாவின் தொடர் கண்காணிப்பு முயற்சிகள், பயனர் பாதுகாப்பிற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை காட்டுவதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
Intermediary Guidelines and Digital Media Ethics Code 2021 ன் படி, குறிப்பாக விதி 4(1)(d) மற்றும் விதி 3A(7) இன் கீழ் ஆகஸ்ட் 2024 இல், வாட்ஸ்அப் 10,707 பயனர் புகார்களைப் பெற்றது. அவற்றில் 93% தளத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் முடிவாக மில்லியன் கணக்கான கணக்குகளைத் தடை செய்வதற்கான மெட்டாவின் முடிவு, வாட்ஸ்அப்பை ஒரு தகவல் தொடர்பு தளமாகப் பராமரிக்க நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது. பயனர் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதன் மூலமும், சட்டவிரோத நடவடிக்கைகளை சரிசெய்வதன் மூலமும், பயனர் புகார்களுக்கு சரியான பதிலளிப்பதன் மூலமும், மிகவும் பாதுகாப்பான ஆன்லைன் சூழலை உருவாக்குவதற்கான முயற்சியில் மெட்டா ஈடுபட்டுள்ளது.