லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் பலி!
லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் ஒரே இரவில் இஸ்ரேலிய தாக்குதலில் 60 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று மாவட்ட ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த போர்களில் இப்பகுதியில் இன்னும் மோசமான நாள்.
செவ்வாய்க்கிழமை காலையும் மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் இருந்து உடல்களை வெளியே எடுத்தனர்.
லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் கடந்த ஒரு மாதமாக லெபனான் முழுவதும் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. லெபனான் அதிகாரிகள், உரிமைக் குழுக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நகரங்களில் வசிப்பவர்கள் தாக்குதல்களை கண்மூடித்தனமானவை என்று கூறுகின்றனர்.
இரவோடு இரவாக தாக்கப்பட்ட எந்த நகரங்களுக்கும் வெளியேற்ற உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை. 67 பேர் கொல்லப்பட்டதாகவும், 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மாவட்ட ஆளுநர் பசீர் கோடர் தெரிவித்தார்.