செய்தி

அமெரிக்காவிலிருந்து 270,000க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றம்

அமெரிக்காவிலிருந்து 270,000க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த நிதியாண்டில் இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளது. அடுத்த ஜனாதிபதி பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் மில்லியன் கணக்கான குடியேறிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கூறிவரும் நிலையில் இந்தக் கணக்கு வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கக் குடிநுழைவுத்துறையின் அந்தத் தகவல் ஜனாதிபதி ஜோ பைடன் தலைமைத்துவத்தின்கீழ் வெளியான கடைசி ஆண்டறிக்கையாகும்.

அது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான எண்ணிக்கையைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் தெற்கு எல்லையைக் கடந்து அந்நாட்டுக்குள் நுழைந்தவர்கள் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் குற்றச்செயலுக்காகத் தண்டனை பெற்றவர்கள் அல்லது குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியவர்களாகும்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியிருப்போரின் எண்ணிக்கை 11 முதல் 15 மில்லியன் பேர் என்று கணிக்கப்படுகிறது.

(Visited 70 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி