நாசாவில் 2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பணி நீக்கம் – டிரம்ப் அரசின் அதிரடி நடவடிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையின் கீழ் நாசாவில் பணிபுரியும் 2,145 உயர்பொறுப்பு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஊழியர்களில் பெரும்பாலோர் GS-13 முதல் GS-15 வரையிலான பதவிகளில் உள்ளவர்கள் ஆவார்கள்.
இவர்கள் கென்னடி, ஜான்சன் உள்ளிட்ட முக்கிய விண்வெளி மையங்களிலும், விண்வெளிப் பயணம், ஐடி, நிதி போன்ற துறைகளிலும் பணியாற்றுகின்றனர்.
நாசாவின் செலவுகளை சுமார் $6 பில்லியன் வரை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, சந்திரனுக்கான பயணம் மற்றும் செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்களை அனுப்பும் திட்டங்கள் கேள்விக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
(Visited 1 times, 1 visits today)