உக்ரைனின் செயலால் இயல்பு வாழ்க்கை இழந்த மால்டோவா மக்கள்
மால்டோவாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாயை உக்ரைன் அரசு துண்டித்துள்ளது.
இதனால் மால்டோவா மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சோவியத் யூனியன் உடைந்தபோது தனி நாடாக உருவான மால்டோவாவுக்கு, ரஷ்யா இலவசமாக எரிவாயு வழங்கிவருகிறது.
ரஷ்யாவின் நட்பு நாடான மால்டோவாவுக்கு, உக்ரைன் வழியாக குழாய் மூலம் எரிவாயு அனுப்பப்பட்டுவந்தது.
இந்த நிலையில், ரஷ்யா உடனான போரால் எரிவாயு குழாயை உக்ரைன் அரசாங்கம் துண்டித்துள்ளது.
இதனால், குளிர் காலம் தொடங்கியுள்ள மால்டோவாவில் மக்கள் வீடுகளில் எரிவாயு ஹீட்டர்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)