தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் காலமானார்
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் நட்ராஜ் உடல் நலக்குறைவால் காலமானார்.
விஜயின் கண்ணுக்குள் நிலவு, அஜித்தின் ஆழ்வார், சூர்யாவின் வேல், விக்ரமின் தெய்வத் திருமகள் ஆகிய படங்களில் நடித்துள்ள மோகன் நட்ராஜ் 71வது வயதில் காலமானார்.
அவரது உடலானது சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மேல் திருவெற்றியூரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.





