செய்தி

காணாமல் போன இந்திய மூதாட்டி – 22 ஆண்டுகளுக்குப்பின் YouTubeஇல் அடையாளங்கண்ட பேரன்

பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்ட 75 வயது இந்திய மூதாட்டி 22 ஆண்டுகளுக்குப்பின் வீடு திரும்பியுள்ளார்.

2022ஆம் ஆண்டு திருவாட்டி Hamida Banu என்னும் அந்த மூதாட்டியுடன் நடத்தப்பட்ட நேர்காணல் YouTubeஇல் வெளியிடப்பட்டது.

பலரின் கவனத்தை ஈர்த்த அந்தக் காணொளியை இந்தியாவில் உள்ள அவரது பேரன் பார்த்துத் தனது பாட்டியை அடையாளங்கண்டுள்ளார்.

16ஆம் திகதி இந்தியாவில் உள்ள குடும்பத்துடன் பாட்டி மீண்டும் இணைந்துள்ளார். 2002ஆம் ஆண்டு கணவரை இழந்த பானு சுயமாக உழைத்து நான்கு பிள்ளைகளையும் வளர்த்து வந்தார்.

டுபாயில் வேலை வாங்கித் தருவதாக அவரிடம் சொன்ன முகவரை நம்பி 20,000 ரூபாய் கொடுத்தார். இறுதியில் துபாய்க்குப் பதில் பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு 3 மாதங்கள் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஒருவரை மணந்தார். ஆனால் அவரும் கோவிட் 19 நோய்த்தொற்றால் உயிரிழந்தார்.

வீடு திரும்பிய அவர், இத்தனை ஆண்டுகள் குடும்பத்தைப் பாராமல் நடைபிணமாக இருந்தேன். மீண்டும் குடும்பத்துடன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி என குறிப்பிட்டார்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி