இலங்கையில் மாயமாகியுள்ள துப்பாக்கிகள் : நாச வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதா?
மாநில அமைச்சர் டி. வி. சானக்கவின் மாமனார் லலித் வசந்த மென்டிஸின் கொலைக்கு கரந்தெனிய இராணுவ முகாமில் இருந்து திருடப்பட்ட துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அண்மையில் கரந்தெனிய இராணுவ முகாமின் உயர் அதிகாரியொருவர் எல்பிட்டிய பொலிஸில் T-56 துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்திருந்தார்.
இதன்படி, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, குறித்த முகாமின் ஆயுதக் கிடங்கிற்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 14 மகசீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, 2020ஆம் ஆண்டு மின்னேரிய இராணுவ முகாமில் இருந்து 74 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் ஹோமாகம உள்ளிட்ட பல பிரதேசங்களில் 36 துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 38 துப்பாக்கிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவ்வாறான துப்பாக்கிகள் எதுவும் இடம் பெறவில்லை எனவும் இராணுவம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.