இலங்கை செய்தி

இலங்கையில் பட்டினியால் வாடும் லட்சக்கணக்கான மக்கள்!

இலங்கையில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுவதாக தெரியவந்துள்ளது.

கொழும்பிலும் அவ்வாறானவர்கள் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மூன்று வேளை வேளையில் ஒரு வேளை உணவைக் கூட பெற முடியாத மக்கள் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்திலும் இவ்வாறானவர்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, உணவு உற்பத்தியை அதிகரிப்பதே முதன்மையாக செய்யப்பட வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காமல் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியாது எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புதிய பேரவையை திறந்து வைத்து ஜனாதிபதி சமர்ப்பித்த கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு மோசடி, ஊழல், திருட்டு என்பன நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

நாட்டின் வருமான ஏற்றத்தாழ்வு குறைக்கப்பட வேண்டும் என தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, விசேட நீதிமன்றத்தை நியமித்து மத்திய வங்கி குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

அவை விசாரணைகள் இன்று நடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காட்டு யானைகளின் சனத்தொகை இன்று விவசாயிகளுக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!