தாயகம் திரும்பும் இராணுவ வீரர்கள் – ரஷ்யாவில் சமூக நிலைமை குறித்து கவலை அதிகரிப்பு

உக்ரைன் போரில் பங்கேற்ற ரஷ்ய ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால், ரஷ்யாவில் சமூக நிலைமை குறித்து கவலை அதிகரித்துள்ளது.
சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் இதுவரை போரில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் பலர் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருக்கின்றனர். சிலர் சிறையிலிருந்து நேரடியாக போர்க்க்களத்திற்கு அனுப்பப்பட்டவர்கள்.
அதிகமானோர் போருக்குப் பிறகு மனஅழுத்தம், வேலைவாய்ப்புத் தொலைவு போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகி, குற்றச் செயல்களில் மீண்டும் ஈடுபடும் அபாயம் உள்ளது.
இது ரஷ்ய சமூகத்தில் குற்றவியல் வன்முறை அதிகரிக்கக் கூடும் என்பதற்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை கட்டுப்படுத்தும் முயற்சியாக, ரஷ்ய அரசு “Time of Heroes” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் முன்னாள் வீரர்களுக்கு அரசுப் பதவிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது சமுக பாதிப்புகளைத் தவிர்க்கக்கூடிய தீர்வாக அமையுமா என்பது ஏற்கனவே சர்ச்சையாக உள்ளது.