கடுமையான சட்டங்களுக்கு மத்தியிலும் பிரித்தானியாவிற்கு படையெடுக்கும் புலம்பெயர்வோர்!
பிரித்தானியாவில் 2025 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 41,472 ஆக உயர்ந்துள்ளது.
இது தொழிற்கட்சி அரசாங்கத்தின் பலவீனமான யுக்திகளை புலப்படுத்துவதாக நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.
சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளபோதிலும் 2024 ஆம் ஆண்டை விட இந்த வருடத்தில் 13 சதவீதம் அதிகரித்திருப்பதை புதிய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 41 சதவீத அதிகரிப்பை குறிக்கிறது.
தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து கிட்டத்தட்ட 65,000 புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்குள் பிரவேசித்துள்ளனர்.
இதற்கிடையே உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) கடந்த நவம்பரில் புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். தற்காலிக அகதி அந்தஸ்தையும் நிரந்தர குடியேற்றத்திற்காக 20 ஆண்டுகள் காத்திருப்பதையும் அவர் முன்மொழிந்தார்.
இந்த செயற்திட்டம் வெற்றியளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





