Microsoft Outlook செயலி செயலிழப்பு : மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிப்பு!

மைக்ரோசாப்ட் அவுட்லுக் செயலிழந்துள்ளது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் மின்னஞ்சல்களை அனுகுவதில் சிக்கல்களை சந்தித்துள்ளனர்.
உள்நுழைய சரியான விவரங்களைப் பயன்படுத்தினாலும், அவர்களின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் கடவுச்சொற்கள் தவறானவை என்று சொல்லப்படுவதாக பயனர்கள் புகார் அளித்துள்ளனர்.
கணனி பிழையால் மேற்படி தடங்கல் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)