மேகங்களில் நுண்ணிய பிளாஸ்டிக் – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஜப்பான் ஆய்வாளர்கள்
ஜப்பான் மேகங்களில் நுண்ணிய பிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஜப்பானின் புஜி , ஒயாமா சிகரங்களை மறைக்கும் பனியிலிருந்து நீர் சேகரிக்கப்பட்டது.
ஒவ்வொரு லிட்டர் தண்ணீரிலும் 6 முதல் 14 துகள்கள் வரை இருந்ததாக Environmental Chemistry Letters சஞ்சிகையில் கூறப்பட்டது.
மேகங்களில் உள்ள பிளாஸ்டிக் பருவநிலையை எப்படிப் பாதிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
சூரிய ஒளியிலிருந்து வெளியாகும் Ultraviolet Rays எனப்படும் புறஊதாக் கதிர்கள் படும்போது நுண்ணிய பிளாஸ்டிக் சிதைந்து போவதுண்டு.
அப்போது வெப்ப வாயு வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது. பிளாஸ்டிக்கால் ஏற்படும் காற்றுத் தூய்மைக்கேட்டைக் கையாள்வது அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
(Visited 5 times, 1 visits today)