இன்று இரவு விண்கல் மழைப் பொழிவு! இலங்கையர்கள் பார்க்கலாம்
இந்த வருடத்தில் மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழையை அவதானிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மற்றும் நாளை இரவு காண முடியும் என ஆர்தர் சி.கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இதன் முழுமையான அனுபவத்தை நாளை இரவு வடகிழக்கு வானில் பொது மக்கள் காண முடியும்.
இரவு 9 மணிக்குப் பின்னர் வடகிழக்கு வானில் மணித்தியாலத்துக்கு 120 விண்கற்கள் தோன்றும் என ஆர்தர் சி கிளார்க் மத்திய நிலையத்தின் வானியல் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானி இந்திக மெதகங்கொட தெரிவித்தார்.
(Visited 3 times, 3 visits today)