பயனர்களின் உரையாடல்களைப் பயன்படுத்தி பொருட்களை விற்க தயாராகும் மெட்டா நிறுவனம்
மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு (AI) chatbotஇல் பயனர்களுடன் நடைபெறும் உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த மாற்றம் டிசம்பர் 16ஆம் திகதி முதல் இந்த நடைமுறை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் AI chatbot உடன் பயணம் மற்றும் வணிகம் போன்ற விடயங்களைப் பகிரும் போது, மெட்டா பயனாளர்களின் ஆர்வங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ற விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கங்களை வழங்கும்.
இத்தகைய புதிய அணுகுமுறையை மெட்டா தனது தற்போதைய விளம்பர இலக்கிடும் முறைமையில் ஒரு பெரிய மேம்பாடாக கருதுகிறது.
மதம், அரசியல், பாலியல் நோக்குநிலை போன்ற உரையாடல்கள் விளம்பரக் குறிவைப்பிற்கு பயன்படுத்தப்படாது என மெட்டா தெரிவித்துள்ளது.
பயனர்கள் விருப்பமான விளம்பர தலைப்புகளை கட்டுப்படுத்தும் விளம்பர விருப்பத்தேர்வுகள் கருவியை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
இந்த மாற்றம் வரும்போது, Instagram மற்றும் Facebookஇல் AI-உருவாக்கிய உள்ளடக்கங்களுடன் தொடர்புடைய விளம்பரங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.





