அறிவியல் & தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராமில்(Instagram) 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள மெட்டா

இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப்(WhatsApp), இன்ஸ்டாகிராம்(Instagram), பேஸ்புக்(Facebook) மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கின்றன.

18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் அதில் அபாயகரமான மோசமான உள்ளடக்கங்களை அவர்கள் பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனால் மெட்டா(Meta) நிறுவனம், 18 வயதுக்குக் குறைவானவர்களால் பாலியல் உள்ளடக்கிய காட்சிகள், போதைப் பொருள், அபாயகரமான சண்டைக் காட்சிகள் அல்லாத காணொளிகளைப் பார்க்க வழிவகை செய்துள்ளது.

இந்த வசதிகளைப் பெற்றோர்களின் அனுமதியின்றி மாற்ற முடியாது என தெரிவிக்கப்படுகிறது. திரைப்படங்களுக்கு PG-13 ரேட்டிங் இருப்பது போல், இன்ஸ்டாகிராமிலும் புதிய நடைமுறையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளை விரும்பும் பெற்றோருக்கு, இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

சிறுவர்கள் தங்களை 18 வயதுக்கு மேற்பட்டோர் எனக் கூறினாலும் அதனைக் கண்டறிய அதற்கான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் விரைவில் இந்த நடைமுறை அறிமுகமாகவுள்ளது.

(Visited 77 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்