ஹாட்ரிக் கோல் அடித்த மெஸ்ஸி! உலகக்கிண்ண தகுதிச்சுற்றில் ருத்ரதாண்டவம்
பொலிவியா அணிக்கு எதிரான உலகக்கிண்ண தகுதிச்சுற்று கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
Estadio Mas Monumental மைதானத்தில் நடந்த உலகக்கிண்ண தகுதிச்சுற்று கால்பந்து போட்டியில், அர்ஜென்டினா மற்றும் பொலிவியா அணிகள் மோதின.
இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா முதல் பாதியில் 3 கோல்கள் அடித்தது.
நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி (19) மார்டினஸ் (43) மற்றும் ஜூலியன் ஆல்வாரெஸ் (45+3) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இரண்டாம் பாதியின் 69வது நிமிடத்தில் தியாகோ அல்மடா கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து மெஸ்ஸி 84 மற்றும் 86வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் என ஹாட்ரிக் அடித்தார்.
பொலிவியா அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியாததால், அர்ஜென்டினா 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
(Visited 38 times, 1 visits today)





