செய்தி விளையாட்டு

ஆர்ஜன்டீன அணியில் மெஸ்ஸி ஆடவில்லை

உருகுவே மற்றும் பிரேசில் அணிகளுக்கு எதிரான எதிர்வரும் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்கான ஆர்ஜன்டீன அணியில் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி இடம்பெறவில்லை.

அமெரிக்காவின் இன்டர் மியாமி கழகத்திற்காக ஆடும் 37 வயதான மெஸ்ஸி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அட்லாண்டா யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியின்போது உபாதைக்கு உள்ளாகியுள்ளார். அவருக்கு சிறிய அளவிலான உபாதை ஏற்பட்டிருப்பதாக இன்டர் மியாமி அணி குறிப்பிட்டது.

முக்கியமான தகுதிகாண் போட்டிகள் இரண்டில் ஆட முடியாதது வெட்ககரமாக உள்ளது என்று மெஸ்ஸி இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். ‘நான் எப்போதும் போன்று அணியுடன் இணைவதற்கு எதிர்பார்த்தபோதும் கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட சிறிய காயத்தால் ஓய்வு எடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உருகுவே மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மூலம் ஆர்ஜன்டீன அணிக்கு அடுத்த ஆண்டின் உலகக் கிண்ணத்திற்கு தகுதியை உறுதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் அமெரிக்காவின் தகுதிகாண் புள்ளிப்பட்டியலில் ஆர்ஜன்டீன முதலிடத்தில் உள்ளது.

ஆர்ஜன்டீனா எதிர்வரும் 22ஆம் திகதி உருகுவே அணியையும், 26ஆம் திகதி பிரேசில் அணியையும் எதிர்கொள்கிறது.

(Visited 28 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி