இலங்கை செய்தி

ஆணுறைகளுக்கு வற் வரி விதிப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர் மகிழ்ச்சி

 

நாடாளுமன்றத்தில் இன்று (12) முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தொழில்நுட்ப செலவுகள் என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வற் வரிக்கு உட்பட்ட பொருட்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

ஆணுறைகளுக்கு வற் வரி விதிப்பது ஒரு பக்கம் நல்லது என்று அவர் குறிப்பிட்டார்.

சனத்தொகை பெருக்கத்தின் ஊடாக மனித வளத்தை அபிவிருத்தி செய்து நாட்டை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

”நம் நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சியில் சிறிது தாமதம் ஏற்படுகிறது. இப்போது மருந்துச் சீட்டு இல்லாத மருந்துப் பொருட்களை வாங்கும்போது வற் வசூலிக்கப்படுகிறது.

பெனாடோலுக்கு இப்போது மருந்துச் சீட்டு தேவையில்லை. பின்னர் பெனாடோலுக்கு வற் பயன்படுத்தப்படும். மேலும் ஆணுறைக்கான வற் வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆணுறை உபயோகத்தை குறைப்பது ஒருபுறம் நல்லது. ஏனென்றால் குறைந்த பட்சம் மக்கள் தொகையாவது பெருகும். எனவே, வற் ஒரு விஷயத்திற்கு மட்டுமே நல்லது. ஆணுறைகளுக்கு வற் விதிப்பது மிகவும் நல்லது.

இதன் மூலம் சனத்தொகை பெருக்கத்தின் ஊடாக குறைந்த பட்சம் எமது நாட்டின் மனித வளத்தையாவது அதிகரித்து எதிர்காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்.

அதனால்தான் ஆணுறை மீதான வற் வரி விதிப்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை