கொட்டித்தீர்க்கும் பனி : மின்வெட்டு மற்றும் உயிராபத்து குறித்து பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!
ஸ்காட்லாந்தின் (Scotland) சில பகுதிகளில் பனிப்பொழிவு வானிலைக்கான அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இன்றைய தினம் 40செ.மீ வரை பனிப்பொழிவு இருக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் வடகிழக்கு ஸ்காட்லாந்திற்கான அம்பர் எச்சரிக்கை இன்று முதல் நாளை நண்பகல் வரை அமுலில் இருக்கும் என வானிலை அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது பயண குழப்பம், மின்வெட்டு மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டின் ஆரம்பம் முதல் இந்த மாதம் முழுவதும் பனிப்பொழிவு மற்றம் குளிரான வானிலையே நிலவும் எனவும், மக்கள் உயிராபத்துக்களை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





