பாடகி லிசா மேரி பிரெஸ்லியின் மரணம் குறித்த மருத்துவ அறிக்கை
பாடகி-பாடலாசிரியரும், ராக் அண்ட் ரோல் லெஜண்ட் எல்விஸின் ஒரே குழந்தையுமான லிசா மேரி பிரெஸ்லியின் மரணம், முந்தைய எடை இழப்பு அறுவை சிகிச்சை தொடர்பான குடல் அடைப்பால் ஏற்பட்டது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஜனவரி மாதம் லிசா மேரி பிரெஸ்லி 54 வயதில் பாடகி இறந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம், “பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உருவான வடு திசுக்களால் ஏற்பட்ட சிறு குடல் அடைப்புஆகும். இறப்பின் முறை இயற்கையானது” என்று லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண மருத்துவப் பரிசோதகர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை என்பது அதிக எடையைக் குறைக்க விரும்புவோருக்கு செய்யப்படும் வயிற்றை சுருக்கும் பைபாஸ் செயல்முறையாகும்.
(Visited 8 times, 1 visits today)