சிங்கப்பூரில் AI துறையில் திறனாளர்களை ஈர்க்க நடவடிக்கை

!சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் (AI) அரசாங்கம் 20 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யவுள்ளது.
உபகாரச் சமபளத் திட்டங்கள், வேலைப் பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துறையில் திறனாளர்களைப் பேணிவளர்க்க அடுத்த 3 ஆண்டுகளில் அந்த முதலீடு செய்யப்படும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் தியோ நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் 100 பேருக்கு உபகாரச் சம்பளத்தை வழங்கத் திட்டமிடுவதாக அவர் கூறினார். சிங்கப்பூர் அதன் AI திறனாளர்களின் எண்ணிக்கையை மும்மடங்காக்கத் திட்டமிடுகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையை 15,000க்கு உயர்த்த அது எண்ணுகிறது.
(Visited 19 times, 1 visits today)