மாத்தறை – இறப்பர் தோட்டத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!
மாத்தறை வெலிகம உடுகாவ பிரதேசத்தில் உள்ள இறப்பர் தோட்டத்தில் வெட்டுக் காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்றை பிரதேசவாசிகள் இன்று (13) கண்டறிந்துள்ளனர்.
வெலிகம பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, உயிரிழந்தவரின் காற்சட்டைப் பையில் பணமும் வங்கிப் பற்றுச்சீட்டும் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் கால் மற்றும் மார்புப் பகுதியில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
(Visited 17 times, 1 visits today)





