இலங்கையில் இடம்பெறவுள்ள பாரிய வேலைநிறுத்த போராட்டம் : தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு!
ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கக் கோரி எதிர்வரும் 27ஆம் திகதி தேசிய போராட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வுடன் சேர்த்து, மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் தொடர்வதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் மாகாண அரச நிறுவனங்களுக்கு முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்றும், கொழும்பில் உள்ள அரச நிர்வாக அமைச்சுக்கு முன்பாக பிரதான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒன்றியத்தின் பிரதிச் செயலாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.





