நீதித்துறை ஊழலுக்கு எதிராக ருமேனியாவில் பாரிய போராட்டம்
நீதித்துறை ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ருமேனியாவின்(Romania) பல நகரங்களின் வீதிகளில் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக வெகுஜன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில், தலைநகர் புக்கரெஸ்ட்(Bucharest) மற்றும் பிற நகரங்களின் வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, நீதித்துறை அமைப்பில் முறையான துஷ்பிரயோகத்தை கண்டித்த நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களுக்கு ஆதரவளித்தனர்.
புக்கரெஸ்டில் சுமார் 10,000 பேர் அணிவகுத்துச் சென்று, “நீதி ஊழல் அல்ல” மற்றும் “சுதந்திரம் கீழ்ப்படிதல் அல்ல” என்று கோஷமிட்டுள்ளனர்.





