தென் மாகாணத்தில் பல பாடசாலைகள் நாளை மூடப்படவுள்ளன
சீரற்ற காலநிலை காரணமாக அம்பலாங்கொட கல்வி வலயத்திலுள்ள ஐந்து பாடசாலைகளும் காலி கல்வி வலயத்திலுள்ள ஒரு பாடசாலையும் நாளை (15) மூடப்படும் என தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார்.
இதன்படி, பலபிட்டிய கனிஷ்ட கல்லூரி, பலப்பிட்டிய ஸ்ரீபதி கல்லூரி, பலப்பிட்டிய மடுவ கனிஷ்ட கல்லூரி, ஹிக்கடுவ மாலவன்யா கல்லூரி, அம்பலாங்கொட குலரத்ன கல்லூரி ஆகியன மூடப்பட்டுள்ளன.
அத்துடன் காலி பிராந்தியத்திலுள்ள கனேகொட றோமன் கத்தோலிக்க கல்லூரியில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் நாளை நடத்த முடியாது என தென் மாகாண கல்வி அதிகாரிகள் ஆளுநருக்கு அறிவித்துள்ளனர்.
(Visited 48 times, 1 visits today)





