ட்ரம்பின் நடவடிக்கையால் தென்னாப்பிரிக்காவில் மூடப்பட்ட பல மருத்துவமனைகள் – சிக்கலில் HIV தொற்றாளர்கள்!

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா வெளிநாட்டு உதவியைக் குறைப்பதாக அறிவித்ததால், 24 மணி நேரத்திற்குள், தென்னாப்பிரிக்காவில் இலவச HIV சேவைகளை வழங்கும் பல இலாப நோக்கற்ற மருத்துவமனைகள் மூடப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
HIV உடன் வாழும் அல்லது ஆபத்தில் இருக்கும் சில தென்னாப்பிரிக்கர்கள் சரியான நேரத்தில் உயிர்காக்கும் மருந்துகளை வழங்கி உதவி செய்ததாக குறிப்பிடுகிறது.
நாடு முழுவதும் ஏறக்குறைய 12 மருத்துவமனைகள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. குறித்த மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 63,000 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
220,000 பேர் வரை தங்கள் தினசரி HIV மருந்துகளை பெறுவதற்கு இடையூறுகளை எதிர்கொண்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்க அரசாங்கம், உலகின் மிகப்பெரிய HIV திட்டத்தை அமெரிக்கா நிறுத்த அனுமதிக்காது என்று உறுதியளித்துள்ளது.