உலகம் செய்தி

2 லட்சம் Cadbury Creme முட்டைகளை திருடியவருக்கு 18 மாதம் சிறை

ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் வகையில் பிரித்தானிய கேட்பரி சாக்லேட் நிறுவனத்தால் முட்டை வடிவில் வடிவமைக்கப்பட்ட 200,000 Cadbury Creme முட்டைகளை திருடிய குற்றவாளி ஒருவருக்கு பிரிட்டிஷ் ஷ்ரூஸ்பரி கிரவுன் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

32 வயதான ஜோபி பூல், திருடப்பட்ட ட்ரக் ஒன்றுடன் Cadbury சொக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் நுழைந்து 02 இலட்சம் Cadbury Creme முட்டைகளை கொண்டு சென்ற போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட Cadbury Creme Eggs சாக்லேட்டுகளின் மதிப்பு 40,000 டொலர்கள் ஆகும்.

பிரிட்டனில் உள்ள ஷ்ரூஸ்பரி கிரவுன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஜோபி பூலை 18 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

அமெரிக்க உணவு தயாரிப்பு நிறுவனமான Mondelez இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமான Cadbury சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் பிரிட்டனில் ஆண்டுக்கு 220 மில்லியன் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!