துபாயிலிருந்து வந்து பெங்களூருவில் மனைவியைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட நபர்
துபாயில் இருந்து பெங்களூரு வந்த நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
30 வயது தர்மஷிலம் துபாயில் கொத்தனார் வேலை செய்து வந்தார், அதே நேரத்தில் அவரது 27 வயது மனைவி மஞ்சு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்த தம்பதியினர் செப்டம்பர் 2022ல் திருமணம் செய்து கொண்டனர், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அவர்கள் பெண்ணின் தந்தை பெரியசாமியுடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் மஞ்சு படுக்கையில் காணப்பட்டுள்ளார். மேலும் தர்மஷிலம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார்.
குறித்த இருவரின் சடலங்களையும் பெண்ணின் தந்தை பெரியசாமி கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.





