இந்தியா செய்தி

அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்

பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்தை சேர்ந்த 21 வயது நபர் ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்பதாக எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அயோத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட இருக்கும் ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் என இன்டெகாப் அலாம் என்ற நபர் மிரட்டல் விடுத்தார் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

“ஜனவரி 19-ம் தேதி இந்த நபர், பொது மக்கள் அவசர உதவி கோர பயன்படுத்தும் 112 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தனது பெயரை சோட்டா ஷகீல் என்றும், தான் தாவூத் இப்ராகிம்-க்கு நெருக்கமானவர் என்றும் கூறினார்.”

“தொடர்ந்து பேசிய அவர், ஜனவரி 22-ம் தேதி அயோத்தி ராமர் கோவிலை வெடிக்க செய்வேன் என மிரட்டினார். இவர் எவ்வித குற்ற பின்னணியும் கொண்டிருக்கவில்லை, ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவராக தெரிகிறார்,” என அராரியா காவல் துறை கண்காணிப்பாளர் அசோக் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!