இந்தியாவால் தேடப்படும் நபர் கனடாவில் சுட்டுக்கொலை
காலிஸ்தான் ஆதரவாளரும் இந்திய அரசால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீக்கிய மக்கள் அதிகமாக குடியிருக்கும் Surrey நகரிலேயே குருத்வாரா ஒன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சீக்கிய தீவிரவாதம் தொடர்பான குறைந்தது நான்கு NIA வழக்குகளில் நிஜ்ஜார் தேடப்பட்டு வந்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் அவர் தொடர்பிலான தகவல் அளிப்போர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வெகுமதியும் NIA தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. KTF என்ற காலிஸ்தான் ஆதரவு அமைப்பு ஒன்றிற்கு தலைவராக செயல்பட்டு வந்துள்ளார் நிஜ்ஜார்.
மட்டுமின்றி, Surrey நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றின் நிர்வாகத்தையும் அவர் தன்வசம் கொண்டுவந்துள்ளார். மேலும், வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் முன் நடந்த போராட்டங்களின் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
அத்துடன் கனேடிய சீக்கியரான Moninder Boyle என்பவருடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ள நிஜ்ஜர், குருத்வாரா மூலமாக இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தானி கருத்துகளை ஊக்குவித்தும் வந்துள்ளார். இந்த நிலையிலேயே நிஜ்ஜர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.