ஐரோப்பா

ஜெர்மனியில் தனது பிள்ளைகளை கொலை செய்தவருக்கு கிடைத்த தண்டனை

ஜெர்மனி நாட்டில் தனது பிள்ளைகளை கொலை செய்த இந்தியர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

ஜெர்மனியின் கான்ஒவ்ஃ நீதிமன்றமானது 47 வயதுடைய இந்திய நபர் ஒருவருக்கு எதிராக ஆயுட்கால சிறை தண்டனை விதித்து இருக்கின்றது.

அதாவது இந்த 47 வயதுடைய இந்திய நபரானவர் 11.5.2021 அன்று தனத 7 வயதுடைய மகளை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

மேலும் தனது 11 வயதுடைய மகனை கொலை செய்ய முயற்சித்த நிலையில் குறித்த மகன் ஜன்னலில் இருந்து குதிக்கும் பொழுது பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

பின்னர் 11 வயதுடைய சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கி வந்த நிலையில் உயிரிழந்ததாகவும் தெரியவந்திருக்கின்றது.

குறித்த இந்தியரின் மனைவியானவர் இவரை விட்டு வெளியேறியதன் காரணமாக இதற்கு பழிவாங்கும் விதமாக இவர் இவ்வகையான செயலில் ஈடுப்பட்டதாக தெரியவந்திருக்கின்றது.

பொலிஸாரின் தீவிர விசாரணையின் பின்னர் குறித்த இந்தியர் தனது பிள்ளைகளை தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேவேளையில் இவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதியானவர் தன்னை தானே மிகைப்படுத்துகின்ற ஒரு நபராக இருந்ததாகவும் இவர் சமூதாய விடயங்களை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.

(Visited 58 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!