காதலியுடனான வாக்குவாதத்தால் நடுவானில் விமானத்தின் அவசர கதவை திறந்த நபர்
ஜனவரி 7 இரவு அமெரிக்காவின் போவில் உள்ள லோகன் விமான நிலையத்தில் புறப்பட்ட ஜெட் ப்ளூ விமானம் சென்று கொண்டிருந்தபோது அவசர வெளியேறும் கதவைத் திறந்ததாக போர்ட்டோ ரிக்கோ பயணி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தனது காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது விமானத்திலிருந்து குதிக்க முயன்றபோது, சக பயணிகளால் அவர் தடுக்கப்பட்டார்.
மொரலஸ் டோரஸ் என அடையாளம் காணப்பட்ட நபர், சம்பவத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டார், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக சிபிஎஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
டோரஸ் தனது காதலியுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தபோது, விமானம் 161 போர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானுக்குச் சென்று கொண்டிருந்தபோது திடீரென அதன் கதவைத் திறந்தார். நிலைமை சீராகும் முன், மற்ற பயணிகள் தலையிட்டு டோரஸைத் தடுத்து நிறுத்தினர்.





