மிச்சிகனில் கிறிஸ்தவ தேவாலயத்தில் துப்பாக்கி சூடு நடத்தி தீ வைத்த நபர்

துப்பாக்கிதாரி ஒருவர் மிச்சிகன் தேவாலயத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தி கட்டிடத்திற்கு தீ வைத்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேவாலயத்தின் முன் நுழைவாயிலில் 40 வயது நபர் ஒருவர் தனது காரை மோதியதாகவும், பின்னர் வெளியே வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் காவல்துறைத் தலைவர் வில்லியம் ரென்யே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சந்தேக நபர் தேவாலயத்தை விட்டு வெளியேறிய பிறகு அதிகாரிகள் அவரைப் பின்தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய போது குற்றவாளி கொல்லப்பட்டுள்ளார்.
தீ அல்லது துப்பாக்கிச் சூடுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, மேலும் சந்தேக நபரைப் பற்றிய கூடுதல் விவரங்களை அதிகாரிகள் வழங்கவில்லை.
(Visited 6 times, 1 visits today)