இந்தியா செய்தி

ராஜஸ்தானில் திருமண வற்புறுத்தலால் காதலியை கொலை செய்த நபர்

37 வயதுடைய ஒரு பெண் தனது காதலனை சந்திக்க 600 கி.மீ தூரம் காரில் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது காதலரான பள்ளி ஆசிரியர், இரும்பு கம்பியால் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் உள்ள அங்கன்வாடி மேற்பார்வையாளரான முகேஷ் குமாரி, 10 வருடங்களுக்கு முன்பு தனது கணவரிடமிருந்து பிரிந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபரில், பார்மரில் உள்ள பள்ளி ஆசிரியரான மனாரமை பேஸ்புக்கில் தொடர்பு கொண்டார். இருவரும் சந்திக்கத் தொடங்கினர், ஒரு உறவு தொடங்கியது. முகேஷ் குமாரி அடிக்கடி ஜுன்ஜுனுவிலிருந்து பார்மருக்கு காரில் சென்று மணாரத்தைச் சந்திப்பார்.

அவள் அவருடன் குடியேற விரும்பினாள். குமாரி தனது கணவரை விவாகரத்து செய்திருந்த நிலையில், மனராமின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. காவல்துறையினரின் கூற்றுப்படி, முகேஷ் திருமணத் திட்டத்தில் முன்னேறுமாறு மனாரமை வற்புறுத்தி வந்தார், இது அடிக்கடி தகராறுகளுக்கு வழிவகுத்துள்ளது.

இதனால் மனாரம், குமாரி மீது அதிக கோபம் கொண்டு அதிக வற்புறுத்தல் காரணமாக இரும்பு கம்பியால் கொலை செய்து உடலை அவரது காரின் ஓட்டுநர் இருக்கையில் வைத்து, அதை விபத்து என்று சித்தரிக்க முயன்றுள்ளார்.

பின்னர் பொலிஸாரின் தீவிர சோதனை மற்றும் விசாரணையை தொடர்ந்து மனாரம் கைது செய்யப்பட்டுளளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!