பீகாரில் மூன்று மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்
பீகாரின்(Bihar) முசாபர்பூரில்(Muzaffarpur) உள்ள சக்ரா(Chakra) காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட நவல்பூர் மிஷ்ராலியா(Nawalpur Mishralia) கிராமத்தில் ஒரு தினக்கூலி தொழிலாளி மற்றும் அவரது மூன்று மகள்கள் தற்கொலை செய்து கொண்டதாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினக்கூலி தொழிலாளியான 40 வயது அமர்நாத் ராம், தனது மகள்களான 11 வயது ராதா குமாரி, 9 வயது ராதிகா மற்றும் 7 வயது ஷிவானி ஆகியோரை தூக்கிலிட்டு, பின்னர் அதே வழியில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மனைவி இறந்த பிறகு அரசு ரேஷன் பொருட்களை நம்பியிருந்த அமர்நாத், தனது குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்பட்டதால் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
தனது இரண்டு மகன்களான 6 வயது சிவம் குமார் மற்றும் 4 வயது சந்தன் ஆகியோரையும் தூக்கிலிடச் சொன்னதாகக் கூறப்படுகிறது, ஆனால் பயத்தில் இரண்டு மகன்களும் குதிக்கவில்லை, உயிர் பிழைத்துள்ளனர்.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





