ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிக மதிப்புள்ள கார்கள் மாயம் – சிக்கிய நபர்

பிரித்தானியாவில் அதிக மதிப்புள்ள நான்கு கார்களை திருடியதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 மற்றும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதிக்கு இடையில், மூன்று ரேஞ்ச் ரோவர்ஸ் மற்றும் ஒரு லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஆகியவற்றின் உரிமையாளர்கள், கென்ட்டில் உள்ள செவெனோக்ஸ் மற்றும் ஹில்டன்பரோவில் உள்ள கார் நிறுத்துமிடங்களில் இருந்து தங்கள் வாகனங்கள் திருடப்பட்டதாக தெரிவித்தனர்.

செவெனோக்ஸைச் சேர்ந்த ஹாரி கோக்ரான் மீது நான்கு கார் திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக கென்ட் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனவரி மாதம் 22 ஆம் திகதியன்று செவெனோக்ஸில் மோட்டார் சைக்கிளைத் திருடியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

28 வயதான அந்த நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார். அவர் மே 13 ஆம் திகதி அன்று மெய்ட்ஸ்டோன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!