டொனால்ட் டிரம்பின் ஹெலிகாப்டர் மீது லேசர் ஒளியை பயன்படுத்திய நபர் கைது

வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புறப்பட்ட ஹெலிகாப்டர் மீது லேசர் ஒளியை பயன்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டனை சேர்ந்த 33 வயதான ஜேக்கப் சாமுவேல் விங்க்லர், வெள்ளை மாளிகையின் வெளிப்புற நடைபாதையில் நின்று ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் மீது சிவப்பு லேசர் ஒளியை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
விங்க்லரின் நடவடிக்கை “திடீரென குருட்டுத்தன்மை மற்றும் திசைதிருப்பல் அபாயத்தை ஏற்படுத்தியது” என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விங்க்லரின் இந்த செயலுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய ஒரு கூட்டாட்சி குற்றமாகும்.
(Visited 4 times, 1 visits today)