வட அமெரிக்கா

அமெரிக்காவில் தேர்தல் பணியாளர்களை வெடிவைத்துத் தாக்கப்போவதாக மிரட்டல் விடுத்த நபர் கைது

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள தேர்தல் பணியாளர்களை வெடிவைத்துத் தாக்கப்போவதாக மிரட்டல் விடுத்த ஆடவர் நவம்பர் 4ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டதாக அமெரிக்கக் கூட்டரசு அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர் ஒருவரிடமிருந்து அந்த கடிதம் வந்தது போல அதை 25 வயது நிக்கல்ஸ் விம்பிஷ் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.விம்பிஷ் தேர்தல் பணியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 16ஆம் திகதியன்று வாக்காளர் ஒருவருக்கும் விம்பிஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாக்காளர் எழுதியது போல கடிதம் ஒன்றைப் புனைந்து ஜார்ஜியா மாநிலத் தேர்தல் கண்காணிப்பாளருக்கு விம்பிஷ் அதை அனுப்பி வைத்ததாக அரசாங்க வழக்கறிஞர்கள் கூறினர்.

அந்தக் கடிதத்தில் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, விம்பிஷ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகக் கடுமையான போட்டி நிலவும் மாநிலங்களில் ஜார்ஜியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

(Visited 31 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்